உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்..

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்..

திருவாடானை; திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு டிஜிட்டல் கிராப் சர்வே பணியை எதிர்த்து வி.ஏ.ஓ., சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பயிராய்வு பணியை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் டிஜிட்டல் கிராப் சர்வே என்ற பணியை வி.ஏ.ஓ.,க்கள் மூலம் செய்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இப்பணிகளை செய்வதற்கு உகந்த அடிப்படை வசதிகளோ, உபகரணங்கள் வழங்கப்படாததால் பணியில் ஈடுபடமுடியவில்லை என்று வி.ஏ.ஓ.,க்கள் வருவாய் ஆணையரிடம் முறையிட்டனர். இந்நிலையில் இப்பணியை உடனே துவக்க வற்புறுத்தி வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.திருவாடானை வட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 40 வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி