உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்தூர் பேரூராட்சி மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூர் பேரூராட்சி மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

முதுகுளத்துார் : -முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன்பு முதுகுளத்துார் பேரூராட்சி மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கலையரசன், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலை அட்டை வழங்க ஆதார் கார்டு இணைக்க நிர்பந்தப்படுத்துவதை தடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு​ எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின் தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. உடன் தாலுகா செயலாளர் அங்குதன் உட்பட பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை