மேலும் செய்திகள்
குரூப் – 2 தேர்வில் 1786 பேர் ‛ஆப்சென்ட்’
01-Nov-2026
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் அருண் அதியன், மாவட்டத் தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி முரளிதரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.––––
01-Nov-2026