உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பழுதான டிரான்ஸ்பார்மர் மாற்றம்

பழுதான டிரான்ஸ்பார்மர் மாற்றம்

முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, முதுகுளத்துார் அருகே அரப்போது கிராமத்தில் பழுதான டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.முதுகுளத்தூர் அருகே அரப்போது கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம்,கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இங்கு கடலாடி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது.இங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ளது. இதனால் விவசாயத்திற்கு போர்வெல் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடலாடி மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை