உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்: 275 பேர் கைது

தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்: 275 பேர் கைது

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் 275 பேரை போலீசார் கைது செய்தனர்.முதுகுளத்துார் வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சேகர், செயலாளர் ஜெயகாந்தி, பொருளாளர் ராம்கி முன்னிலை வகித்தனர். தேவேந்திர குல வேளாளர் பிரிவை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். 10 சதவீதம் தனி ஒதுக்கீடு வேண்டும். இமானுவேல் சேகரன் சிலை அமைக்க வேண்டும். இமானுவேல் சேகரனை அவமதித்து பேசியவர்களை கைது செய்ய வேண்டுமை. தேவேந்திரர் படுகொலை வழக்குகளை சிறப்பு விசாரணைக்கு உட்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தில் இருந்து தேரிருவேலி விலக்கு ரோடு, பஜார் வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக சென்றனர்.பிறகு முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்ட் அருகே ரோட்டில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடையை மீறி ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் 275 பேரை கைது செய்தனர். இதில் ஒருங்கிணைந்த அனைத்து வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஏ.டி.எஸ்.பி., சுப்பையா தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை