உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கை கோயில் முன் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் பாதிப்பு

உத்தரகோசமங்கை கோயில் முன் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் பாதிப்பு

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ராஜகோபுரம் முன்பாக உள்ள பெரிய வளாகத்தில் ஆக்கிரமிப்பு தரைக் கடைகளால் பக்தர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். பக்தர்களின் காலணிகளை பாதுகாப்பதற்கு தனியாக இடவசதி அமைக்கப்படாததால் ராஜகோபுரம் முன்புறம் உள்ள சுப்பிரமணியர் சன்னதி முன்புறம் ஏராளமான காலணிகளை குவித்து வைக்கின்றனர். இதுபோக தேர் நிறுத்துமிடம் முன்பாகவும் காலணிகளை விடுகின்றனர்.பக்தர்கள் கூறியதாவது: ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் இரு புறங்களிலும் உள்ள பூக்கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு தரை விரிப்பு கடைகளால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பக்தர்களின் வசதிக்காக ஆலமரத்தின் அருகே காலணி பாதுகாக்கும் இடத்தை அமைத்திடவும், பக்தர்களுக்கு இடையூறு தரும் வகையில் இயங்கும் ஆக்கிரமிப்பு தரை விரிப்பு கடைகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை