உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேத்தாண்டி வேடம் அணிந்த நேர்த்திக்கடன் பக்தர்கள்

சேத்தாண்டி வேடம் அணிந்த நேர்த்திக்கடன் பக்தர்கள்

கமுதி: கமுதி அருகே கருங் குளத்தில் சக்தி மாரியம்மன் கோயிலில் வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோயில் 25ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். அக்னி சட்டி, கரும்பாலை தொட்டில் உட்பட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் வினோதமான முறையில் உடல் ஆரோக்கியம் பெற வேண்டி பக்தர்கள் களிமண்,சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு கிராமத்தின் முக்கிய விதியில் ஊர்வலமாக நடனமாடி பக்தர்கள் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். சக்தி மாரியம்மனுக்கு பால், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி