உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் அருகே தேங்கும் கழிவுநீரால் பக்தர்கள் அவதி

கோயில் அருகே தேங்கும் கழிவுநீரால் பக்தர்கள் அவதி

சிக்கல்: சிக்கல் வடக்கு தெரு சப்பாணி கோயில் அருகே பல ஆண்டுகளாக திறந்த வெளியில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றத்தினால் பக்தர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர். சிக்கல் வடக்கு தெருவில் 20க்குமேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சாக்கடை வசதியின்றி திறந்தவெளியில் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. மழைபெய்தால் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகியுள்ளது. துர்நாற்றம், கொசுத்தொல்லையால் மக்கள் நோய்தொற்று அச்சத்தில் உள்ளனர். எனவே சிக்கல் ஊராட்சிநிர்வாகம் வடக்கு தெரு சப்பாணி கோயில் பகுதியில் சாக்கடை வசதி செய்துதர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை