வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்பல்காம் யூ டியூப், டிக்டாக் சேனல்களில் பாவம் தொலைய, அணம் கொட்ட இந்த இந்த தலத்துக்குப் போய் கும்புடுங்கன்னு ஆளாளுக்கு பதிவு போடறாங்க. மக்களும் ஆன்மீக டூர் கோவில் கோவிலா அலையறாங்க. எப்போ விடியுமோ?
ராமேஸ்வரம்: தொடர் விடுமுறயை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனத்தில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகை தந்தனர்.பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள்.இதன்பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை ஒருவழிப் பாதையாக மாற்றினாலும் வழக்கத்தை விட அதிகமான வாகனங்கள் வருகையால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. சசிகுமார் தரிசனம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நேற்று நடிகரும், இயக்குனருமான சசிகுமார் வந்தார்.அவர் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள பதஞ்சலி ஜீவசமாதிக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வைத்து 10 நிமிடங்கள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு தரிசனம் செய்தார்.பிறகு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். கோயில் குருக்கள் சசிக்குமாருக்கு பிரசாதம் வழங்கினார். பிறகு அவர் மதுரை சென்றார்.
இப்பல்காம் யூ டியூப், டிக்டாக் சேனல்களில் பாவம் தொலைய, அணம் கொட்ட இந்த இந்த தலத்துக்குப் போய் கும்புடுங்கன்னு ஆளாளுக்கு பதிவு போடறாங்க. மக்களும் ஆன்மீக டூர் கோவில் கோவிலா அலையறாங்க. எப்போ விடியுமோ?