புத்தாண்டில் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்
ராமேஸ்வரம்: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்திற்கு சென்றனர். அங்குள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். இதன் பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.