பக்தர்கள் வீதி வலம்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் வளர்பிறை ஏகாதசி தினத்தில் பக்தர்கள் ஒன்று கூடி எல்லை தெய்வங் களான தேரடி கருப்பண்ண சுவாமியை வழிபட்டு மாலை நேரத்தில் வீதி வலம் செல்கின்றனர். ரத வீதிகளில் பஜனை, நாமாவளி பாடி பக்தர்கள் சென்றனர். ராமகிருஷ்ண ஆசிரமத்தில் இரவு அன்ன தானம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி அன்று இந்நிகழ்வு நடப்பதாக பக்தர்கள் கூறினர்.