உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எக்ககுடி முதல் புத்தேந்தல் வரை சேதமடைந்த ரோட்டில் சிரமம்

எக்ககுடி முதல் புத்தேந்தல் வரை சேதமடைந்த ரோட்டில் சிரமம்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி ஊராட்சியில் இருந்து புத்தேந்தல் வரை செல்லும் 4 கி.மீ., ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.திருப்புல்லாணி ஒன்றியம் எக்ககுடி ஊராட்சி பாதி எல்லையிலும், ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தேந்தல் வரை மீதி எல்லையிலும் தார் ரோடு செல்வதால் யார் முதலில் ரோடு அமைப்பது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் ரோடு தரமற்று இருந்ததால் விரைவில் சேதமடைந்தது. எக்ககுடி கிராம மக்கள் கூறியதாவது:எக்ககுடி ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் வாறுகால் வசதி இல்லாததால் சாலையின் நடுவே கழிவுநீர் தேங்கி குளம் போல் உள்ளது. அவற்றிலிருந்து செல்லும் கிராமத் தார் ரோடு கொத்தங்குளம் வழியாக புத்தேந்தல் வரை செல்லும் பிரதான சாலையாகும். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி பகுதியில் புதிய தார் ரோட்டை தரமாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை