உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில் குளமாக தேங்கிய மழைநீரால் சிரமம்

ரோட்டில் குளமாக தேங்கிய மழைநீரால் சிரமம்

கமுதி : கமுதி வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.நேற்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு மேல் இடியுடன் கமுதி, கோட்டைமேடு உட்பட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மழை கொட்டியது.மழை பெய்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கமுதி பேரூராட்சி காமாட்சி அம்மன் கோயில் தெரு உட்பட தாழ்வான தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதே போன்று கால்வாய் உயர்த்தி கட்டப்படாததால் மழைநீர் செல்ல வழியின்றி பள்ளி முன்பும், ரோடுகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது.இவ்வழியே நடந்து செல்ல முடியாமல் மக்கள், மாணவர்கள் சிரமப்பட்டனர். எனவே பருவமழைக் காலம் துவங்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.* பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டியது. நேற்று மதியம் ஒரு மணிக்கு பரமக்குடியில் லேசான சாரல் மழை பெய்தது. இதே போல் சுற்றுவட்டார கிராமங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்து பூமி நனைந்ததால் குளிர்ந்த சுழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ