உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குளிர்சாதன வசதியில்லாமல் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல் 

குளிர்சாதன வசதியில்லாமல் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல் 

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவில் குளிர்சாதனவசதி இல்லாததால் எக்ஸ்ரே எடுப்பதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.மருத்துவமனை பழைய கட்டடத்தில் எக்ஸ்ரே பிரிவு செயல்டுகிறது. இவர்களுக்கு புதிய கட்டடத்தில் இடம் இருந்தும் கட்டடத்தில் நீர் கசிவதால் புதிய கட்டடத்தில் இடம் ஒதுக்கப்படவில்லை.பழைய கட்டடத்தில் இயங்குவதால் புதிய கட்டடத்தில்எலும்பு முறிவு ஏற்பட்டவர்களை சக்கர நாற்காலியில் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.மேலும் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் குளிர் சாதன வசதியில் இயங்க வேண்டும். ஓராண்டாக குளிர் சாதனம் பழுதாகி இயங்கவில்லை. இதனால் எக்ஸ்ரே இயந்திரம்அடிக்கடி வெப்பமாகி எக்ஸ்ரே எடுக்கும் போது தானாக ஆப் ஆகி விடுகிறது. வெப்பம் குறைந்த பிறகுதான் மீண்டும் எக்ஸ்ரே எடுக்கும் நிலை உள்ளதால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைஉள்ளது. எக்ஸ்ரே பிரிவில் குளிர் சாதன வசதி செய்து நோயாளிகள் பாதிக்கப்படாமல் எக்ஸ்ரே எடுக்கமருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை