ஐ.டி.ஐ.,களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை ஆக. 31 வரை நீட்டிப்பு
ராமநாதபுரம் : மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில் 2025--26ம் ஆண்டுக்கான நேரடிச் சேர்க்கை ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்துார், கமுதி மற்றும் கடலாடி, உத்தரகோசமங்கை ஆகிய இடங்களில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,களில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் பிரிவுகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் எட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 14 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். பெண்களுக்குரிய தொழிற்பிரிவிற்கு வயது வரம்பு ஏதுமில்லை. மாதந்திர கல்வி உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆக., 31க்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு தொலைபேசி எண்: பரமக்குடி: -04564-- 231 303, ராமநாதபுரம்: -04567--231 214, கடலாடி: -97914 28208, கமுதி: 94868 88176, உத்திரகோசமங்கை: -97914 28208, முதுகுளத்துார்: 04576 - -222 114-ல் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.