உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடைவுத் தேர்வு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ஆய்வு

அடைவுத் தேர்வு: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ஆய்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடக்கும் அடைவுத் (ஸ்லாஸ்) தேர்வை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் குமார் ஆய்வு செய்தார்.அரசுப் பள்ளிகளில் படிக்கும் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடும் வகையில் அடைவு தேர்வுகள் கடந்த மூன்றாண்டுகள் நடக்கிறது. இதன்படி நேற்று (பிப்.4) 3ம் வகுப்பிற்கும், இன்று (பிப்.5) 5ம் வகுப்பு, நாளை (பிப்.6) 8ம் வகுப்பிற்கு தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் கொள்குறி வினா முறையில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 35 வினாக்கள், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 45 வினாக்கள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 வினாக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தேர்வுகள் நடக்கிறது.ராமநாதபுரம் ஒம்சக்தி நகரில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் குமார், அடைவுத் தேர்வை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களிடம் தேர்வு குறித்தும் தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் குறித்தும் கேட்டறிந்தார்.தேர்வு முறையை ஆய்வு செய்தார். முன்னதாக இணை இயக்குநர் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு திட்ட உணவை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை