மேலும் செய்திகள்
40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
13-Nov-2024
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 'சஸ்பெண்ட்'
24-Nov-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 45 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில் தற்போது வரை 24,334 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ளனர். 19,353 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜீ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
13-Nov-2024
24-Nov-2024