டில்லி டூ தனுஷ்கோடிக்கு டூவீலரில் மாற்றுத்திறனாளி வீரர்கள் பயணம்
ராமேஸ்வரம்: கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு தனுஷ்கோடியில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள் டூவீலரில் டில்லிக்கு விழிப்புணர்வு பயணம் செய்தனர்.சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட், தடகளப் போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கல்வி, அரசு, தனியார் துறையில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி வீரர்கள் 5 பேர் டில்லியில் இருந்து டிச.14ல் டூவீலரில் விழிப்புணர்வு பயணம் புறப்பட்டனர்.இவர்கள் உ.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகத்தில் நேற்று முன்தினம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி வந்தனர். தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து மீண்டும் டூவீலரில் டில்லி செல்லும் பயணத்தை இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி துவக்கினார். இவர்கள் 6000 கி.மீ., பயணித்து ஜன., 3ல் டில்லி செல்ல உள்ளனர்.ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், ராமேஸ்வரம் தீவு விளையாட்டு கழகம் தலைவர் கராத்தே பழனிச்சாமி, சமூக ஆர்வலர்கள் மாரிமுத்து, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.