உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அக்னி தீர்த்த கரையில் ஒதுங்கிய கடல் புற்களால் அருவருப்பு

அக்னி தீர்த்த கரையில் ஒதுங்கிய கடல் புற்களால் அருவருப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஒதுங்கும் கடல் புற்களை அகற்றாமல் உள்ளதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி செல்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் வட, தென் மாநில பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிகின்றனர். இந்நிலையில் கடலில் ஏற்பட்ட தட்பவெப்ப மாறுபாட்டால் கடலுக்குள் வளரும் கடல் புற்கள் பெயர்ந்து சில நாட்களாக அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராள மாக ஒதுங்கியுள்ளது. இதனை ராமேஸ்வரம் நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் உரிய நேரத்தில் அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி செல்கின்றனர். குவிந்து கிடக்கும் கடல் புற்களை தினசரி அகற்றி அக்னி தீர்த்தத்தின் புனிதம் காக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை