உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரயில் தண்டவாளத்தில் துண்டு துண்டாக கிடந்த ஆண் உடல்

ரயில் தண்டவாளத்தில் துண்டு துண்டாக கிடந்த ஆண் உடல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் துண்டு துண்டாக கிடந்த ஆண் உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரிக் கின்றனர். சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதும் நசுங்கி முகம் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. உடலை பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், தற் கொலையா, தவறி விழுந்தாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை