உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி: மாணவர்கள் சாதனை

மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி: மாணவர்கள் சாதனை

ராமநாதபுரம் : மாவட்ட சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் வென்று சாதித்துள்ளனர்.தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், கலெக்டர் அலுவலகத்தில்உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்டஅளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. 14 ,17, 19 ஆகிய பிரிவுகளில்ஒற்றை கம்பு இரட்டை கம்பு, கம்பு சண்டை போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவிகள் ரித்திகாஸ்ரீ ஒற்றை கம்புபோட்டியில் முதல் பரிசும், காஜல் சோபியா இரட்டை கம்புபோட்டியில் முதல் பரிசும், மாணவர் வர்சன்ஸ்ரீ கம்பு சண்டைபோட்டியில் முதல் பரிசு வென்று மயிலாடுதுறையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில்தேர்வாகியுள்ளனர். சாதித்த மாணவர்களை சிலம்பம்மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் பயிற்சியாளர்கள் . திருமுருகன்,நகசோன் பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !