மேலும் செய்திகள்
கிரீன் பாரடைஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
13-Nov-2024
முதுகுளத்துார்: முதுகுளத்துார் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. சேர்மன் காந்திராஜன் தலைமை வகித்தார். தாளாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஆட்லின் லீமா வரவேற்றார்.போட்டியில் முதுகுளத்துார் வட்டாரத்தில் தனியார், அரசுப் பள்ளியில் இருந்து 400க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராக சென்னை அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பாவை குழந்தைகள் தினத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முகமூடி அணிந்து மலர் கொடுத்து வரவேற்றனர்.பின் மாணவர்கள் சுற்றுச்சூழல் மேம்பாடு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, காற்று மாசுபடுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட படைப்புகள் காட்சிப்படுத்தினர். டேனியல் செல்லப்பா பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.தனியார் பள்ளி மாவட்டக் கல்வி அலுவலர் ரவி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டச் செயலாளர் காந்தி, மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் துரைபாண்டியன் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
13-Nov-2024