உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதுக்கரையில் ஆடு மாடுகளால் இடையூறு

சேதுக்கரையில் ஆடு மாடுகளால் இடையூறு

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அருகே முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகள் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திதி, தர்ப்பணம் உள்ளிட்டவைகளுக்காக படைக்கக்கூடிய வாழை இலை, வாழைப்பழம், பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருள்களை ஆடு, மாடுகள் கூட்டமாக வந்து தின்று செல்லும் போக்கு தொடர்கிறது. இதனால் பூஜை பொருட்கள் பெருமளவில் சேதமடைவதாக பொதுமக்கள் மற்றும் புரோகிதர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே சேதுக்கரை ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கால்நடை வளர்ப்போருக்கு உரிய முறையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை