70 வயதானோருக்கு கூடுதல் பென்ஷன் தி.மு.க., தேர்தல் வாக்குறுதி என்னாச்சு ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் பேட்டி
ராமநாதபுரம்:சட்டசபை தேர்தலின் போது 70 வயதானவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்படும் என தி.மு.க., சார்பில் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு சமூக நலத்துறை ஓய்வூதியர் நல அமைப்பு மாநில தலைவர் பி.குபேந்திர பாபு அதிருப்தி தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் நடந்த ஓய்வூதியர் தினவிழாவில் பங்கேற்றவர் கூறியதாவது:தி.மு.க., சட்டசபை தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயதானவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் பென்ஷன் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் ஆகியவற்றை இதுவரை நிறைவேற்றவில்லை. ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டை எளிமைப் படுத்தி அனைத்து சலுகைகளும் இலவசமாக வழங்க வேண்டும்.ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ஒப்புவிப்பு பெறுதல் (Commutation of pension) 15 ஆண்டுகளாக உள்ளதை 12 ஆண்டாக மாற்ற வேண்டும் என்றார்.