ஊராட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு
திருவாடானை: திருவாடானை அருகே கட்டிவயல் ஊராட்சி அலுவலகம் திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் ரோட்டோரம் உள்ளது. நேற்று காலை 10:00 மணிக்கு ஊராட்சி செயலர் கவிதா அலுவலகத்தை திறப்பதற்காக சென்றார். அப்போது கதவு உடைக்கபட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கம்ப்யூட்டர் சி.பி.யு., திருடு போயிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு ஆவணங்கள் சிதறிக் கிடந்தன. கவிதா புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் சென்று ஆய்வு செய்தனர். ஊராட்சி சம்பந்தபட்ட பழைய ஆவணங்களை திருடும் நோக்கத்துடன் சம்பவம் நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு ஆதியூர், அரும்பூர், திருவெற்றியூர் உள்ளிட்ட 7 ஊராட்சி அலுவலகங்களில் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர், மானிட்டர், டிஸ்க் உள்ளிட்ட பல பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றனர்.