உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடியில் நாய்கள் தொல்லை

சாயல்குடியில் நாய்கள் தொல்லை

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி பகுதியில் அருப்புக்கோட்டை சாலை, ராமநாதபுரம் சாலை, துாத்துக்குடி செல்லும் சாலை, காய்கறி கடை பஜார் சந்தை கடை செல்லும் பகுதிகளில் பெருவாரியான அளவில் வெறிநாய்கள் திரிகின்றன.நகரின் பிற பகுதியில் இருந்து பிடிக்கப்படும் நாய்களை சாயல்குடி அருகே உள்ள வனப்பகுதிகள் விட்டு விடுவதால் கூட்டமாக தெரியும் நாய்கள் காலை முதல் இரவு வரை கூட்டமாக திரிகின்றன.இரவு நேரங்களில் அவிழ்த்து விடப்படும் ஆடு மாடுகளுடன் நாய்களும் சேர்ந்து கொண்டு சாலையில் படுத்திருப்பதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடிக்கவும், கால்நடைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி