உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தற்கொலை செய்தவரின் கண்கள் தானம்

தற்கொலை செய்தவரின் கண்கள் தானம்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த மகனின் இரு கண்களையும் அவரது தந்தை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்.ராமநாதபுரம் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் இறந்துகிடந்தார். விசாரணையில்அவர் ராமநாதபுரம் சூரன்கோட்டைகாலனியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் மணிகண்டன் 24. சென்னையிலிருந்து வந்தஎக்ஸ்பிரஸ் ரயிலில் குடும்ப பிரச்னையால் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

கண்கள் தானம்

இந்நிலையில் மணிகண்டனின் கண்களை ராமநாதபுரம் அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவனைக்கு அவரது தந்தை சந்திரசேகர் தானம் செய்தார். அவர் கூறுகையில், 'மகன் இறந்து விட்டாலும் அவரது கண்கள்வாழும். ஏழை ஒருவரின் மகனுக்கு பயன்படும் என்பதைநினைத்து பெருமை அடைகிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை