மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் தர்ணா
04-Dec-2024
ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்பரமக்குடி: பரமக்குடியில் இயங்கும் ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை மூடும் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.ஓய்வூதியர் சங்க கூட்டம் கவுரவ தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. கோட்டத் தலைவர் நாக நாராயணன், செயலாளர் முஹம்மது இஸ்ஸதீன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பற்குணன் வரவேற்றார்.அப்போது 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் பரமக்குடி அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தை மாற்றக் கூடாது. இதனால் தபால்கள் பல நாட்கள் தாமதமாக கிடைக்கும். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் உட்பட நீதிமன்ற, அரசு அலுவலக தபால்கள் அனைத்தும் தாமதமாகும். ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள்.எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அஞ்சல் பிரிப்பகம் மூடும் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். தொடர்ந்து துறையின் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பினர்.
04-Dec-2024