வரதட்சணை கொடுமை: எட்டு பேர் மீது வழக்கு
திருவாடானை: பரமக்குடியை சேர்ந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பரமக்குடியை சேர்ந்தவர் மோனிகா பிரியதர்ஷிணி 26. இவருக்கும் திருவாடானை அருகே பகவதிமங்கலத்தை சேர்ந்த கண்ணன் 36,க்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவர் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தாய் வீட்டிலிருந்து கூடுதலாக நகை, பணம் வாங்கி வருமாறு தொந்தரவு செய்தனர். இது குறித்து பரமக்குடி போலீசில் மோனிகா பிரியதர்ஷிணி புகார் செய்தார். அதன் பேரில் கண்ணன், வளர்மதி, ஜான்சிராணி, சுந்தரி உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் திருவாடானை எல்லைக்கு உட்பட்ட பகவதிமங்கலம் பகுதி என்பதால் இவ்வழக்கு மேல் விசாரணைக்காக திருவாடானை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாறுதல் செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.