உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

பரமக்குடி; பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் வழிகாட்டுதலில் ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவண பாபு, பரமக்குடி வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் அறிவு உத்தரவின்படி போதைப் பொருள் தடுப்பு பற்றியசட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.தலைமையாசிரியர் (பொ) ஆரோக்கியதாஸ், ஆசிரியர்கள், மாணவர்கள்பங்கேற்றனர். வக்கீல் மாடசாமி சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !