உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் போதைப் பொருள் தடுப்பு குழு சார்பில் மாணவர்களுக்கு, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ் மாணவர்களுக்கு போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி, செய்த அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பரூக் அப்துல்லா, கல்லுாரி போதைப்பொருள் தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் செர்பியா, நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை