உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

முதுகுளத்துார் : -முதுகுளத்துாரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.முதுகுளத்துாரில் வருவாய்த்துறை, போலீசார் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சோனைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தை தாசில்தார் சடையாண்டி, டி.எஸ்.பி., சின்னக்கண்ணு துவக்கி வைத்தனர்.அப்போது மாணவர்கள் காந்தி சிலை, பஜார், பஸ்ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை வரை போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், வருவாய்த்துறையினர், போலீசார் பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை