உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோடு ஆக்கிரமிப்பால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை

ரோடு ஆக்கிரமிப்பால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே இளங்கோ அடிகள் தெரு ரோட்டை இருபுறத்திலும் ஆக்கிரமிப்பால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மதுரை ரோட்டில் அமைந்துள்ளது. பஸ்ஸ்டாண்ட் ரோடு மட்டுமின்றி லேத்தஸ் பங்களா ரோடு, இளங்கோ அடிகள் தெரு வழியாகவும் ஆம்புலன்ஸ் உட்பட ஏராளமான வாகனங்கள் வருகின்றன.இந்நிலையில் மேற்சொன்ன இடங்களில் ரோட்டின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வேகமாக வரமுடியாத நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை