உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இ-சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும்

இ-சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும்

திருவாடானை ; திருவாடானை தாலுகாவில் மக்கள் அலைக்கழிப்படுவதால் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.திருவாடானை தாலுகாவில் திருவாடானை, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு மக்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்கின்றனர்.உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு அரசுத் துறைகள் தொடர்புடைய சேவைகளும் உள்ளன. இந்நிலையில் இத்தாலுகாவில் குறிப்பிட்ட பொது இ-சேவை மையங்களே உள்ளன.புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது, ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைப்பது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாகத் தான் மேற்கொள்ள வேண்டும்.தாலுகா அலுவலகத்தில் ஒரு சேவை மையம் மட்டும் உள்ளது. இதில் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். கூட்டம் அலைமோதுவதால் பெரும்பாலானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.எனவே பொதுமக்கள் நலன் கருதி சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ