மேலும் செய்திகள்
ஆசிரியர்கள் அரசு ஊழியர் ஊர்வலம்
11-Jan-2025
கடலாடி: சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் சி.பி.எஸ்.ஐ., ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட மூவர் குழுவை தேர்தல் வாக்குறுதி எண் 309ன் அடிப்படையில் வாபஸ் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.யூனியன் அலுவலகத்தில் கடலாடி துணை பி.டி.ஓ., அலுவலக மேலாளர்கள் தலைமையிலும் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சீனி முகம்மது முன்னிலையில் உள்ளாட்சி ஊரக அரசுத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் துணை பி.டி.ஓ., விஜயகுமார் தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏராளமான ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
11-Jan-2025