ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது
ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள்11 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 454 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய--- ----- இலங்கை எல்லைப் பகுதியில் மீன்பிடித்தனர். அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால் பீதியடைந்தவர்கள் படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஒரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைக்க தாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த வீரர்கள் இப்படகை மடக்கிப் பிடித்தனர். அப்படகில் இருந்த பாக்கியராஜ் 38, சவேரியார் அடிமை 35, முத்துகளஞ்சியம் 27, எபிரோன் 35, ரஞ்சித் 33, பாலா 38, யோவான் 36, இன்னாசி 37, ஆர்னாட் ரிச்சே 36, அன்றன் 45, அந்தோணி சிசோரியன் 43, ஆகியோரை கைது செய்து ஊர்காவல்துறை மீன்வளத்துறை அதிகாரியிடம் படகுடன் ஒப்படைத்தனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவுப்படி ஏப்.,9 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.