மயங்கி விழுந்த முதியவர் பலி
ஆர்.எஸ்.மங்கலம் ; ஆர்.எஸ்.மங்கலம் அருகே நத்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு 76. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததால் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த முதியவர் ராமு, தேசிய நெடுஞ்சாலை சமவெளி பாலத்தின் அருகே மயங்கி விழுந்து பலியானார். ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா விசாரிக்கிறார்.