விபத்தில் மின்வாரிய கள உதவியாளர் பலி
திருவாடானை : திருவாடானை துணை மின்நிலையத்தில் கள உதவியாளராக பணியாற்றியவர் ஜேசுராஜ் 55. நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு மின்வாரிய அலுவலகத்திலிருந்து சின்னக்கீரமங்கலத்தை நோக்கி டூவீலரில் சென்றார். வாரச்சந்தை அருகே எதிரில் வந்த மற்றொரு டூவீலர், மோதியதில் ஜேசுராஜ் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜேசுராஜ் இறந்தார். திருவாடானை போலீசார் மற்றொரு டூவீலரில் சென்ற சானாவயல் முருகானந்தம் 28, என்பவரை தேடுகின்றனர்.