மின்சார வாரிய போர்மேன் கைது
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் இடம் வாங்கித்தருவதாக ரூ.2.35 லட்சம் மோசடி செய்த மின் வாரிய போர்மேனை போலீசார்கைது செய்தனர்.ராமநாதபுரம் நாகநாதபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம். இவரிடம் ஸ்ரீவில்லிப்புத்துார் மின் வாரியத்தில் போர்மேனாக பணிபுரியும் சந்திரன் 50, இடம் வாங்கித்தருவதாக ரூ.2.35 லட்சம் பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தரவில்லை. செய்யது இப்ராஹிம் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 2ல் வழக்குப்பதிவு செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படிகேணிக்கரை போலீசார் பண மோசடியில் ஈடுபட்ட சந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.