உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தன மின்விபத்தை தடுக்க அறிவுரை

மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தன மின்விபத்தை தடுக்க அறிவுரை

திருவாடானை: கோடைமழையால் திருவாடானை தாலுகாவில் 22 மின்கம்பங்கள் சாய்ந்தன. மின்சார விபத்தை தவிர்க்க மின்வாரிய அலுவலர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.திருவாடானை தாலுகாவில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சூறாவளியுடன் பெய்த பலத்த மழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.தேளூரில் அறுந்துவிழுந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு இறந்தது. அறிவித்தியில் மூதாட்டி காயமடைந்தார். கிளியூர், பாண்டுகுடி, நகரிகாத்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 22 மின்கம்பங்கள் சாய்ந்தது.சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கபட்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மின்வாரிய அலுவலர்கள் கூறியதாவது:- மின் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. மழை பெய்யும் போது மின்மாற்றிகள், மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்.இழுவை கம்பி அல்லது மின்கம்பத்தின் மீது கொடிக்கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிர்க்கவும், இடி மின்னலின் போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கம்யூட்டர் போன்றவைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணில் புகாரை பதிவு செய்யலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை