மின்னியல் கருத்தரங்கு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மின்னியல், மின்னணுவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். துறை தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் வழுதுார் பவர் பிளான்ட் உதவி செயற்பொறியாளர் தெய்வேந்திர தாஸ் பேசுகையில், மின் வாரியத்துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் அதற்கேற்ப படிப்பில் கவனம் செலுத்தி வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.