நிர்வாகிகள் தேர்வு
கமுதி: கமுதி வழக்கறிஞர்கள்சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் தேர்வு, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மூத்த வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். புதிய தலைவராக ரமேஷ்கண்ணன், செயலாளர் சிவராமகிருஷ்ணன், பொருளாளர் நேதாஜி சரவணன், துணைத் தலைவர் முனியசாமி, இணைச் செயலாளர்அய்யாதுரை தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.