உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்மாய்களை மராமத்து செய்ய வேண்டும்

கண்மாய்களை மராமத்து செய்ய வேண்டும்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன. விவசாயிகளை ஒருங்கிணைக்கவும், பகிர்மான கால்வாய் பராமரிப்பு, ஷட்டர் பராமரிப்பு, நிதி ஆதாரம் திரட்டுதல், நீரை முறையாக பகிர்ந்தளித்தல்,பாசன நீர் திறக்க வேண்டிய காலம் உள்ளிட்ட பணிகளுக்காக இத்தாலுகாவில் 39 சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதற்கான தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. 39 கண்மாய்ப் பாசன சங்கத் தலைவர்களும், 205 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது குறித்து நீர்ப்பாசன சங்க தலைவர்கள் கூறியதாவது:தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின் நீர்ப்பாசன தலைவர்களின் கருத்துக்களை கேட்கும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் கூட்டம் நடைபெறவில்லை. கண்மாய் பராமரிப்பு குறித்து அரசு சார்பில் எந்த சுற்றறிக்கையும் வரவில்லை.அனைத்து கண்மாய்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்தும்,மடைகள் துார்ந்தும் உள்ளது. குடிமராமத்து செய்யப்பட்ட கண்மாய்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு துவங்கியுள்ளது. இதனால் கண்மாய்களின்பரப்பளவு சுருங்கி வருகிறது.மழைக்காலங்களில் பெய்யும் மழை நீராலும், வரத்துக்கால்வாய்கள் வழியாக நீர் வரத்துள்ள பெரும்பாலான கண்மாய்கள் பராமரிப்பில்லாததால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது என்றனர். பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியதாவது:நீர்பாசன சங்க தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலைவர்களிடம் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. விரைவில் ராமநாதபுரம் மாவடத்தில் நடைபெறும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி