மேலும் செய்திகள்
சிறப்பு கிராம சபை கூட்டம்
02-Nov-2025
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் எல்லா காலங்களிலும் பயன்படுத்தப்படும் வகையில் பண்ணை குட்டைகள் தோண்டப்பட்டுள்ளன. உத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, கீழச்சீத்தை, பனையடியேந்தல், மரியராயபுரம், இதம்பாடல், நல்லிருக்கை, ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பண்ணை குட்டைகள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக தோண்டப்பட்டுள்ள பண்ணை குட்டைகள் பலன் தருகின்றன. 20 அடி அகலத்திலும் 40 அடி நீளத்திலும் அமைக்கப்பட்ட பண்ணை குட்டை வயல்வெளிகளுக்கு மத்தியில் உள்ளது. விவசாயிகள் கூறியதாவது: கோடையிலும் பலன் தரக்கூடிய வகையில் பண்ணை குட்டைகளின் பங்களிப்புகள் உள்ளன. நெல் சாகுபடி போக மீதமுள்ள இரண்டாம் கட்ட சாகுபடியாக மிளகாய், பருத்தி, மல்லி உள்ளிட்டவைகள் விளைவிக்கும் போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். இவற்றை ஈடு செய்ய பண்ணைக் குட்டைகள் பெருவாரியாக உதவி புரிகின்றன. வேளாண் வணிகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டைகளுக்கு உரிய முறையில் மானியம் வழங்கப்படுகிறது. விவசாய தேவைகளுக்கும், மீன் குஞ்சு வளர்ப்பிற்கும் பயனுள்ளதாக பண்ணை குட்டைகள் அமைகின்றன என்றனர்.
02-Nov-2025