உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பண்ணை பள்ளி திட்டம்

பண்ணை பள்ளி திட்டம்

பரமக்குடி : பரமக்குடி அருகே கள்ளிக்குடி கிராமத்தில் பண்ணை பள்ளி திட்டத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் வேளாண் சூழலில் பகுப்பாய்வு நெற்பயிரில் சூழலில் கட்டமைப்பு குறித்து கள்ளிக்குடி கோனாகுளம் கிராமத்தில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பரமக்குடி வேளாண் துணை இயக்குனர் ராஜேந்திரன் பேசுகையில், ரக தேர்வு, விதைக்கும் பருவம், பூஞ்சான விதை நேர்த்தி முறைகள், உயிர் உர விதை நேர்த்தி தொழில்நுட்பம் பற்றி விளக்கினார்.துணை வேளாண் அலுவலர் சந்திரன், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அரசு மானிய திட்டங்கள் பற்றி பேசினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் சிவகுமார் ஏற்பாடுகளை செய்தார். உதவி அலுவலர் சத்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி