உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெற் பயிர்களை சேதப்படுத்தி வரும் மான்களால் விவசாயிகள் பாதிப்பு

நெற் பயிர்களை சேதப்படுத்தி வரும் மான்களால் விவசாயிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: கோட்டக்கரை ஆற்றுப் பகுதியில் உள்ள விலை நிலங்களில் நெற்பயிர்களை மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். கோட்டைக்கரையாறு ஆனந்துார் பகுதியில் இருந்து ஆய்ங்குடி, செட்டியகோட்டை, கொக்கூரணி, சனவேலி, அழியாதன்மொழி வழியாக சென்று கிழக்கு கடற்கரை சாலை சேந்தனேந்தல் கடல் பகுதியில் முடிவடைகிறது. இந்த ஆற்றில் அதிகப்படியான சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு அதிகளவில் மான்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. அருகிலுள்ள கண்மாய் பகுதிகளிலும் மான்கள் வசிக்கின்றன. இந்நிலையில், நெல் விதைப்பு செய்து தற்போது நெற்பயிர்கள் முளைத்து வளர்ந்துள்ள நெற்பயிர்கள் மான்களுக்கு இரைகளாகி வருகின்றன. குறிப்பாக சித்துார்வாடி, கலங்காப்புளி, வெட்டுக்குளம், அழியாதன்மொழி, கோவிலேந்தல், குல மாணிக்கம், கண்ணாரேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் உள்ள விளை நிலங்களில் உள்ள பயிர்களை மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்கின்றன. வயல்களில் உள்ள நெற்பயிர்களை மான்கள் இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும், மேய்ந்து நாசப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மான்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி