உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி பகுதியில் கடலை பறிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

கமுதி பகுதியில் கடலை பறிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

கமுதி : கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடலை செடியில் கடலை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.கமுதி அருகே வல்லக்குளம், டி.புனவாசல், கல்லுப்பட்டி, காக்குடி, தரைக்குடி, புத்துருத்தி, பெருமாள் குடும்பன்பட்டி, காக்காகுளம், நாராயணபுரம் உட்பட அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஐயாயிரத்திற்கும் அதிகமான பரப்பளவில் கடலை விவசாயம் செய்கின்றனர்.கடலை விவசாயத்திற்கு குறைந்தளவு தண்ணீர் போதுமானதால் ஏராளமானோர்​கடலை விவசாயம் செய்கின்றனர். இந்த ஆண்டு பருவமழை அதிகம்பெய்ததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது.இதையடுத்து கடலை விவசாயம் செய்த நிலையில் கடலைச் செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்தது.தற்போது கடலை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயி மருது கூறியதாவது:இந்த ஆண்டு பருவமழையால் கடலை விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்தது. இருந்தபோதிலும் தண்ணீர் வீணாகக் கூடாது என்பதற்காக கூடுதல் பணம் செலவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைத்து கடலை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது.மகசூல் நிலை அடைந்ததால் கடலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த ஆண்டைகாட்டிலும் இந்த ஆண்டு ஓரளவு வளர்ச்சி அடைந்தது. தற்போது 100 கிலோ மூடை ரூ.2800க்கு அருப்புக்கோட்டை, வீரசோழன்பகுதியில் விற்கிறோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு விலை குறைவாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை