உழவு பணியில் விவசாயிகள் தீவிரம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டுகின்றனர்.முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்தனர். அதற்குப் பிறகு ஒரு சில விவசாயிகள் மிளகாய், பருத்தி, சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்தனர். முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.இதனால் நிலங்கள் ஈரப்பதமாக உள்ளது. இந்நிலையில் முதுகுளத்துார் அருகே வெண்ணீர் வாய்க்கால், கீழத்தூவல், ஏனாதி, காக்கூர், கீரனுார், ஆனைசேரி, நல்லுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காக கோடை காலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.