உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழைநீரில் மூழ்கி நெற்பயிர் சேதம் கவலையில் விவசாயிகள்

மழைநீரில் மூழ்கி நெற்பயிர் சேதம் கவலையில் விவசாயிகள்

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவில் 10 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.இத் தாலுகாவில் 20,000 ஏக்கருக்கும் மேல் நெல், மிளகாய், சிறுதானியப் பயிர் விவசாயம் செய்து வந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால் நெற்பயிர் நன்கு வளர்ந்தது. விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தனர்.கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு ஒருசில கிராமங்களில் நெல், மிளகாய் பயிர் சேதமடைந்தது. பின் விவசாயிகள் தேங்கிய தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றி பயிரை காப்பாற்றி வந்தனர். பாதிக்கும் மேல் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.இந்நிலையில், நேற்று முன்தினமும் கமுதி பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. 10,000 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர் சேதம் அடைந்துள்ளது. பாதிப்புகள் குறித்து வேளாண் துறை, வருவாய்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ