மேலும் செய்திகள்
ஜூலை 18 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
15-Jul-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த டிச., ஜன., பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. பலமுறை மனு அளித்தும் போராட்டம் செய்தும் பலனில்லை என குறைதீர் கூட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் விவாதம் நடந்தபோது தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தலைவர் பாக்கியநாதன் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு ஓராண்டாகியும் நிவாரணத்தொகை வழங்கவில்லை. நுாறு சதவீதம் காப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் பயிர்களுக்குரிய நிவாரணம் விரைவில் வந்துவிடும் என கலெக்டர் தெரிவித்தார்.எப்போது என உறுதியாக சொல்ல வேண்டும், ரயில்மறியல் உட்பட பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என கலெக்டரை முற்றுகையிட்டு அரசை கண்டித்து கோஷமிட்டனர். அதன்பிறகு கூட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.முன்னதாக வைகை ஆற்று நீரை பெற்றுத்தந்ததற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் கலெக்டருக்கு பொன்னாடை போத்தினர். அதன்பிறகு வட்டார வாரிய விவசாயிகள் தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில், ஆடி மாதம் விதைப்பு துவங்கிவிட்டது. டிச., ஜன., மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நீர் நிலைகள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும். மழை மானிகள் போதிய அளவு அமைந்திட வேண்டும், மான் மற்றும் காட்டுப் பன்றிகளால் ஏற்படுத்தும் பயிர் சேதங்களை தடுக்க வேண்டும். பருத்தி, மிளகாய் வாங்கிட வியாபாரிகள் 100க்கு 8 சதவீதம் கமிஷன் கேட்பதை தடுக்க வேண்டும். கோரிக்கை மனுவிற்கான பதில் தருவது இல்லை எனப்பேசினர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அலுவலர்களை அனுப்ப கூடாது கண்டிப்பாக சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டார்.
15-Jul-2025